திருச்சி ஜுன் 26-
திருச்சி அரியமங்கலம் ராஜப்பா நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 31)இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 23-ந்தேதி பிறந்த நாள் விழாவிற்கு சென்று விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே வந்து கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்து, அவரிடம் இருந்து 1/2 பவுன் தங்க மோதிரம், வெள்ளி ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து சதிஷ்குமார் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது பாலக்கரை பகுதியை சேர்ந்த கேசவபூசன் (வயது 19), ரித்திஸ்குமார் (வயது19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கேசவபூசன், ரித்திஸ்குமார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
