Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் காத்தாயி அம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆனி மாத உற்சவம்

கும்பகோணம் பாணாதுரை தெற்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காத்தா
யி அம்மன், காளியம்மன், மாரியம்மன் திருக்கோவிலின் ஆனி மாத உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், ஆடும் கரகம் மற்றும் சக்தி சூலம் ஆகியவை மேளதாளங்கள் முழங்க, பக்தர்களின் கோஷங்களுடன் ஊர்வலமாக எடுத்துச்

செல்லப்பட்டன. கும்பகோணத்தில் முக்கிய வீதிகளின் வழியாக எழுந்தருளிய இந்த புனித ஊர்வலம், காத்தாயி அம்மன், காளியம்மன், மாரியம்மன் திருக்கோவிலை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை

நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

மேலும், விழாவையொட்டி பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த ஆனி மாத உற்சவத்தில் பாணாதுரை வடக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆன்மிக உணர்வுடன் அம்மனை வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

error: Content is protected !!