Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு... அரியமங்கலத்தில் சோகம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (40). இவர் அந்த பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து கடந்த 25 ந் தேதி திருச்சி பால்பண்ணை பகுதியில் குடிபோதையில் இருந்த சங்கர் திடீரென்று மயங்கி விழுந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் சங்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சங்கர் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலில் பிரச்னை… வாலிபர் தற்கொலை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் அதனன் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைத் தூர கல்வியில் பிபிஏ படித்து வருகிறார். இந்நிலையில் நாசிக் என்ற நண்பருடன் திருச்சி மதுரை ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி உள்ளார். மேலும் ஷேக் அதானத் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த காதலியிடம் ஏற்பட்ட பிரச்சனையில் தான் தற்கொலை செய்து கொள்வதாக ஷேக் அதானத் காதலியிடம் கூறியுள்ளார்.இதனை கேட்ட காதலி அதிர்ச்சிடைந்து
அறிவுரை கூறியுள்ளார். ஆனால் ஷேக் அதானத் கேட்கவில்லை. இந்நிலையில் அந்த காதலி பதறி போய் சேக் அதானத்தின் தம்பி ஹக்கீம் பாஷாவிடம் தகவலை கூறியுள்ளார். பிறகு ஹக்கீம்
பாஷா அறையில் தங்கி இருக்கும் தன்னுடைய அண்ணனை பார்க்க நேற்று சென்ற போது ஷேக் அதனன் விடியற் காலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த ஹக்கீம் பாஷா உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!