Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

திருச்சி பெரிய மிளகு பாறை வேட்டுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மனைவி ராஜலக்ஷ்மி வயது 42. இவர் தற்போது உறையூர் போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார் இன்று காலை தனது தாயார் ரங்கம்மாளுடன் மொபட்டில்
வேலைக்குப் புறப்பட்டு சென்றார். மத்திய பஸ் நிலையத்துக்குள் நுழைந்து கரூர் பஸ்கள் நிற்கும் பகுதி வழியாக வெளியே வந்த போது, எதிரே வந்த ஒரு தனியார் டவுன் பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
இதில் போலீஸ் ஏட்டு ராஜலட்சுமி மற்றும் அவரது தாயார் ரங்கம்மாள் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சேர்த்தனர். இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!