சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பல மாற்றங்களை கொண்டு வர டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளது. 2024ல் இருந்து தற்போது வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வபெருந்தகை தலைவராக நீடித்து வருகிறார். அவர் ஏற்கனவே தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக தெரிவித்திருந்த நிலையில் அடுத்து யார் தலைவராக மாறப்போகிறார் என்ற கேள்வி வலுத்துள்ளது.
தேர்தலுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு கூட்டணி வியூகங்கள் முற்றிலும் மாற்றம் அடைந்துள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் நீண்ட காலம் தான் அங்கம் வகித்த திமுக கூட்டணியை விட்டு விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்தது.
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் -க்கு இரண்டு அமைச்சரவை இடங்களை ஒதுக்கினார் விஜய். அதுமட்டுமின்றி ஒரு மாநிலங்களவை எம். பி சீட்டும் வழங்கப்பட்டது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெறுவதற்கு குறைந்தபட்சம் 36 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தமிழ்நாட்டில் ஐந்து சட்டமன்றஉறுப்பினர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பும் பின்பும் மூன்று மாநிலங்களை பதவிகளை கேட்டு பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் திமுக ஆதரவாக பேசி வருகிறார் என்ற விமர்சனங்கள் கூட அவர் மீதி கட்சியில் 2ஆம் கட்ட நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.
தவெகவிற்கு ஆதரவு நிலைபாட்டியில் தேர்தலுக்கு முன்பாக மாணிக் தாகூர்,பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தனர் . தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் தவெக கூட்டணி அமைய முக்கிய காரணியாக இருந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு ராஜ்ய சபா பதவி வழங்கப்பட்டது , அதே போல் மாணிக்கம் தாகூர்க்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாணிக்கம் தாகூர்க்கு வாய்ப்பு
தேர்தல் வேலைகள் தீவிரமெடுத்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவை கடுமையாக விமர்சித்து தீர்மானம் போட்டவர் மாணிக்கம் தாகூர் . அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுகவுக்கு எதிராக தொடர்ந்து ஒலித்த முக்கிய குரல்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸின் தனித்துவமான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக செயல்பட்டதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை தேர்தலுக்கு முன்பே டெல்லி தலைமையிடம் எடுத்துச் சென்றவர்களில் மாணிக்கம் தாகூரும் முக்கியமானவர் என கூறப்படுகிறது. பின்னர் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழலில் காங்கிரஸ் – தவெக கூட்டணி உருவாக முக்கிய பங்கு வகித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல், இந்த கூட்டணி மாற்றத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மாணிக்கம் தாகூருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் தற்போது கட்சி வட்டாரங்களில் பரவி வருகின்றன.
தற்போதைய தலைவர் செல்வபெருந்தகை ஏற்கனவே தலைவர் பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் புதிய தலைமையை உருவாக்கும் பணிகள் வேகமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி தற்போது தமிழகத்தில் புதிய அரசியல் சூழலை எதிர்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்த கட்சி, தற்போது தவெக தலைமையிலான ஆட்சியில் பங்குதாரராக மாறியுள்ளது. அமைச்சரவை இடங்கள், மாநிலங்களவை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பலன்களை பெற்றுள்ள நிலையில், இந்த புதிய கூட்டணியை வலுப்படுத்தும் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்து மேலிடத்தில் நிலவுகிறது.
அதே நேரத்தில், தலைவர் பதவிக்கான போட்டியில் மாணிக்கம் தாகூர் மட்டுமின்றி வேறு சில மூத்த தலைவர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், டில்லி தலைமையுடன் நெருக்கமான தொடர்பு, தேர்தலுக்கு முன்பேதவெககூட்டணிக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாடு மற்றும் மாநில அரசியலில் தொடர்ந்து வெளிப்படுத்திய செயல்பாடு ஆகியவை மாணிக்கம் தாகூருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகின்றன.
இதனால், தமிழ்நாடு காங்கிரஸின் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.
