ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தரம் கர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு ராம் இவரது மகன் அஜய் (19 ). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த இந்த மாணவன் சக நண்பர்களுடன் முக்கொம்பு சென்றுள்ளார் பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்தார் அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவரை வெள்ளநீர் அடித்துச் சென்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் மகேந்திரன் குமார் குடுத்த புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை சென்று வருகின்றனர்.
