விபி ஜி ராம் ஜி திட்ட விதிகள் சிலவற்றில் மாற்றங்களும், தளர்வுகளும் அவசியமாகிறது என பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “விபி ஜி ராம் ஜி திட்டத்தில் சில விதிகளில் தளர்வுகள் அவசியமாகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டமானது நிதி பகிர்வு முறையை பொறுத்தவரை தற்போதைய வழிகாட்டுதலின்படி ஊதியம், கட்டுமான பொருட்கள், நிர்வாக செலவுகள் ஆகிய அனைத்திற்கும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு இடையே 60:40 என்ற வீதத்தை கட்டாயமாக்குகின்றன. இத்திட்டத்தால் ரூ.5000 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு கூடுதல் நிதி சுமை ஏற்படுகிறது. நிதிபகிர்வை 75=25 வீதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஊதிய, நிர்வாக செலவு – மத்திய அரசு 100% நிதியுதவியை தொடர வேண்டும்.மகாத்மா காந்தியின் பெயரிலேயே திட்டத்தை தொடர வேண்டும். பணிகளை உரிய காலத்தில் செயல்படுத்த ஏதுவாக திட்டங்களை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
