புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் லதாவின் செயல்பாடு பெரும் விமர்சனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் வசித்து வரும் லதா. இவர் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு வந்த நாட்களில் இருந்து எதற்கெடுத்தாலும பணம் பணம் என்று கேட்டு நச்சறித்து வருகிறார். குறிப்பாக வீடு கட்டுபவர்களிடம் வெளிப்படையாகவே பணம் கேட்டு மிறட்டுகிறாம். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடம் லேயவுட் போடும் போது அளவுக்கு அதிகமாக பணம் கேட்டு பெற்று வருகிறார். அவர்களும் தொழில் நடத்த வேண்டி பணத்தை உள்ளுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிடுகின்றனர். இதேபோல் தனக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்கள் தொடர்பு கொண்டு அந்த செலவு இந்த செலவு என சொல்லி பணம் பெற்று வருகிறார். சில நேரங்களில் செயலாளர்கள் கடும் மன உழைச்சலில் பணியாற்றி வருகின்றார்கள். எதற்கு எடுத்தாலும் மேல கேக்குராங்க மேல கேக்குராங்கன்னு லதா பணியாற்றும் துறை சார்ந்த புதுக்கோட்டையில் உள்ள அலுவலர்கள் பெயரை சொல்லி கேட்டு அனைத்து தரப்பையும் தொந்தரவு செய்கிறாம். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வேலிகருவை அகற்றம் குறித்த அதிகாரிகள் கூட்டத்தில் லாதாவை மாவட்ட கலெக்டர் உங்கள் பணி மோசமாக உள்ளது. என்று திட்டி வெளியே அனுப்பிட்டாரம். மேலும் இவர் குறித்து புகார்கள் ஊராட்சி இணை இக்குனர் அலுவலகம், ஊராட்சிகள் திட்ட அலுவலர் அலுவலகத்திற்கு சென்றால் தன் கீழ் பணியாற்றும் அலுவலர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து கடுமையாக திட்டி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அலுவலகம் செல்வதற்கே பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அச்சப்படுகின்றனராம்.
