நியூயார்க்கில் ரஷ்ய ஜோடி 1,454 அடி உயரமுள்ள கட்டடத்தின் உச்சியில் ஏறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். கருப்பு நிற ஆடையுடன் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் உள்ள கோபுரத்தில் ஏறி, ‘உலக அமைதி’ என்ற பதாகையைக் காட்டினர். பின்னர், பிரபோசலும் நடந்தது. இதையடுத்து நியூயார்க் போலீசார் அந்த ஜோடியைக் கைது செய்தனர். துணிச்சலான செயலில் ஈடுபட்டு திகைக்க வைத்த காதல் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது.
