Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூர் குவாரி விபத்து- ராட்சத பாறை சரிந்து 7 பேர் பலி- 6 பேர் படுகாயம்!

பெங்களூர் குவாரி விபத்து- ராட்சத பாறை சரிந்து 7 பேர் பலி- 6 பேர் படுகாயம்!

பெங்களூர் மாடப்பட்டனா பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கல்குவாரியில் இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்காகப் பல கல்குவாரிகள் விதிமுறைகளை மீறியும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலும் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. மாடப்பட்டனா பகுதியில் உள்ள இந்த குவாரியிலும், முறையான பாதுகாப்பு தணிக்கைகள் செய்யப்படாததே இந்த எதிர்பாராத பாறை சரிவு விபத்துக்கும், தொழிலாளர்களின் மரணத்திற்கும் முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது.

பெங்களூர் மாடப்பட்டனா பகுதியில் உள்ள கல்குவாரியில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கல் உடைக்கும் பணியிலும், லாரிகளில் ஏற்றும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குவாரியின் மேல் பகுதியில் இருந்த ஒரு ராட்சத பாறை திடீரென பயங்கர சத்தத்துடன் சரிந்து கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் பாறையின் அடியில் நசுங்கி 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார், காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!