WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய பிறகு அவர் தொடங்கிய அரசியல் அமைப்பில் தற்போதுவரை சுமார் 20 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அதனை கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகளும் வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில், மாநாடு நடத்தி புதிய அரசியல் என்ட்ரி கொடுக்க அண்ணாமலை திட்டமிட்டு வருகிறாராம்.
