திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரி கே.கே.ரமேஷ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மலையை அளவிட்டதில் முரண்பாடுகள் இருப்பதால், 5 ஏக்கர் பரப்பளவை மீண்டும் அளவிட அரசுத் தரப்பில் 4 வாரக் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு, விசாரணையை ஆகஸ்ட் 14-க்கு ஒத்திவைத்தது.
