கோவை கணபதி நகரை சேர்ந்த தொழிலதிபர் சண்முக பாண்டியன் என்பவரது வீட்டை, அவரது மருமகனும் மருத்துவருமான விக்னேஷ் தன் பெயருக்கு மாற்றி தருமாறு வற்புறுத்தி, பின்னர் அதை ரூ.15 கோடிக்கு விற்றுள்ளார். இந்நிலையில், அந்த வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த மாமனாருக்கு சொந்தமான 900 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து சண்முக பாண்டியன் அளித்த புகாரின் பேரில், அவரது மருமகன் விக்னேஷ், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகிய 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
