Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனநலம் பாதித்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய மர்மநபர் எஸ்கேப்

மனநலம் பாதித்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய மர்மநபர் எஸ்கேப்

கடலூர் அருகே ரோட்டில் தனியாக நடந்து சென்ற மனநிலை பாதித்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே நேற்று முன்தினம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் அப்பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர், அப்பெண்ணின் வாயை மூடியவாறு, அருகிலுள்ள மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த அப்பெண்ணை அவ்வழியாக சென்ற மக்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவரவே, உடனே நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் பலாத்கார பிரிவில் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பெண்ணை பலாத்காரம் செய்த மர்மநபரை அடையாளாம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!