செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ஆதி,நகர் பகுதியில் வசித்து வருபவர், முகமது யூசுப் (வயது -56) இவர் அதே பகுதியில் பிரியாணி செய்யும் குடோன் ஒன்றை வைத்து நடத்தி வருவதோடு அருகில் பிரியாணி கடையும் வைத்துள்ளார்..
இந்த நிலையில் பிரியாணி குடோனில் பணிபுரிந்து வரும் நபரின் 12,வயது சிறுமி விடுமுறை நாட்களில் தந்தையுடன் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார், அப்போது முகமது யூசுப் கடந்த நான்கு மாதங்களாக சிறுமிக்கு பாலில் தொந்தரவில் ஈடுபட்டதோடு தந்தையிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகும் மிரட்டியாக கூறப்படுகின்றது.
அதேபோன்று பிரியாணி குடோனுக்கு சிறுமி தந்தையோடு வந்தபோது சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விடுவதாக கூறிவிட்டு சென்றதும் வழக்கம் போல் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் முகமது யூசுப்ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென தந்தை வந்ததும் சிறுமி நடந்தவை எல்லாம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இது குறித்து சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது புகாரின் அடிப்படையில் முகமது யூசுப் கைது செய்து போஸ்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
