தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்ட சரத்குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.மேலும் மனிதவள மேலானதுறை அமைச்சராக பொறுப்பேற்றார். தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு

உட்பட்ட 69 ஆவது வார்டு பகுதி வட்ட செயலாளர் ஆர்.ஜெகன் ஏற்பாட்டில் பாரதியார் தெரு, கரிகாலன் தெரு, ஜகஜீவன்ரம் தெரு, காமராஜர் நகர், அண்ணா தெரு,
உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி ஜீப்பிலும், நடந்து சென்றும் நன்றி தெரிவித்தார். முன்னதாக அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு சாமி தரிசனம் நடைபெற்றது மேலும் தங்கள் பகுதி குறைகளை மனுவாக அமைச்சரிடம் பொதுமக்கள் வழங்கினர் மனுவை பெற்றுக் கொண்ட

அமைச்சர் கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார் இந்நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளர் நாகராஜ்
மாவட்ட செயற் குழு உருப்பினர் நித்திய மற்றும் மகளிர் அணி த.வெ.க உறுப்பினர்கள் உடன் இருந்தனர். 📍 தாம்பரம், 2026 — ETamilNews நிருபர்
