Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிக்கிம் எல்லையில் ராணுவ வீரர் வீரமரணம்-ரூ.40 லட்சம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

சிக்கிம்- வீரமரணமடைந்த ராணுவவீரர் குடும்பத்திற்கு நிதியுதவி

வடக்கு சிக்கிம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் வினோத்குமார் வீர மரணம் அடைந்தார்.

அவருடைய மனைவி வி.பவித்ராவுக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் த.சரத்குமார், கார்கில் நிவாரண நிதியில் இருந்து ரூ.40 லட்சம் கருணை தொகையை காசோலையாக வழங்கினார்.

இந்த நிகழ்வில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, அரசு சிறப்பு செயலாளர் எ.சுந்தரவல்லி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!