நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே வலம்புரி பாலச்சந்திரன் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகையான

திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகப் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
