நாளை தமிழக முதல்வர் கரூர் வருகை: மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இறுதிக்கட்ட பணி மும்மரம்: இருக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் சாலை முழுவதும் பேரிகாடுகள் அமைத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் நாளை கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் இதனை முன்னிட்டு கரூர் வெண்ணைமலை அருகே உள்ள அட்லஸ்

கடையரங்கம் மைதானத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் 5000 பொதுமக்கள் அமரும் வகையில் மாபெரும் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு பொதுமக்கள் உள்ளே வரும் வழி மற்றும் வெளியே வரும் வழியைத் தவிர மற்ற அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இறுதி கட்ட பணி மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகள் வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்வர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நகரப் பகுதி வழியாக செல்ல உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை, திருக்காம்புலியூர், மனோரா கார்னர், லைட் ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், சுங்க கேட், தான்தோன்றி மலை உள்ளிட்ட சாலை முழுவதும் தடுப்புகள் அமைத்து உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
அதனை தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக மனவாசி பகுதியில் ரூபாய் 1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் தனியாக தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துயரச் சம்பவத்தின் போது உயிரிழந்த 41 குடும்பங்களை முதல்வர் சந்தித்து பணி ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
