Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை

பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம் காலனித் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார், விவசாயி மற்றும் தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் வர்ஷா (17), பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக வர்ஷா பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். 

இதனால் வர்ஷாவின் தாயார், மகளிடம் பள்ளிக்குச் செல்லுமாறு அறிவுரை கூறிவிட்டு காட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வர்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தாயார் கதவைத் திறந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியானார்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!