Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( 20 ). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு பயின்று வருகிறார் பகுதி நேரமாக தள்ளுவண்டி கடையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார் இந்த நிலையில் சதீஷ்குமார் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்காக தில்லை நகர் அருகே தனது தள்ளுவண்டியை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு அவரிடம் பணம் கொடுக்காமல் தகராறு செய்தார் இது குறித்து சதீஷ்குமார் கேட்கவே அவரை அந்த வாலிபர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார் காயமடைந்த சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ஹரிஹரன் (22 )என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனியார் நிறுவன ஊழியர் திடீர் மாயம்

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் தமிழக நகரை சேர்ந்தவர் உமாசித்ரா (40) இவரது கணவர் நித்திரம்பாக்கம் விஜயகுமார் (41) இவர் மலேசியாவில் உள்ள ஒரு சரக்கு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் விஜயகுமார் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார் தொடர்ந்து அவரது மனைவியை தொடர்பு கொண்டு கடனை அடைத்து விட்டு வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார் இதையடுத்து நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வந்து விஜயகுமார் தனது மனைவியிடம் தான் திருச்சி வந்து விட்டதாக தெரிவித்தார் தொடர்ந்து அவர் வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்தி நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் முகேஷ் குமார் 18. இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 21 நாட்களாக வேலை செய்து வந்தால் இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அறையில் அவர் நேற்று இருந்தார் அப்போது திடீரென விசித்திரமான சத்தம் கேட்டது உடனடியாக சக ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர் அப்போது அங்கு முகேஷ் குமார் மின்சாதன பெட்டியில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து மயங்கியது உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் முகேஷ் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபர் தற்கொலை..

திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டி சேர்ந்தவர் ஜஸ்டின் பிரபாகரன் (29). இவர் கே.கே நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியாராக பணியாற்ற விரும்பி வந்தார் இந்த நிலையில் அவர் பல்வேறு மாநில தலைநகரங்களில் அதாவது கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களில் பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று ஜஸ்டின் பிரபாகர் பெங்களூருவில் இருந்து உடல்பரி சோதனை செய்து கொண்டு திருச்சி வந்தார் அப்போது முதல் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஜஸ்டின் பிரபாகர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!