Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகாராஷ்டிராவில் சாலை விபத்து: லாரி-பிக்கப் வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

மகாராஷ்டிராவில் சாலை விபத்து: லாரி-பிக்கப் வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.  நாக்பூர் – ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிம்பல்கான் சாலைப் பகுதியில், பாவ் தாபா அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. லாரியும் பிக்கப் வேனும் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் மூவர், சக்கோலி துணை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த உடனேயே காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதியில் சில போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டன. இந்த விபத்துக்கான கரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!