நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், திருச்சி, மதுரை, தஞ்சை, செங்கல்பட்டு, சிவகங்கை, நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
