தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, தலையாரி தெரு அருகே உள்ள கொண்டப்பன் நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள தனியார் சைக்கிள் கடைக்கு சொந்தமான ( பழனியப்பா எம்பொரியம்) குடவுனில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, புது சைக்கிள் மற்றும் டயர்கள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் முற்றிலும் இருந்து நாசமானது.
பட்டுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள இந்த குடோனின் தீப்பிடித்து எறிந்த நிலையில்,

கொழுந்துவிட்டு எரிந்த தீ மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவாமல் தீ அணைக்கப்பட்டது. தீ பாதிப்பு மற்ற இடங்களுக்கு பரவாமல் அணைக்கப்பட்ட பொழுதும் குடோனிற்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. பட்டுக்கோட்டையில் தீயணைப்பு துறைக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள 12 ஆயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட தீயணைப்பு வாகனத்தின் மூலம் பட்டுக்கோட்டை தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயணைத்தனர்
