மேற்கு வங்கம் சோதேபூரில், குடும்பத் தகராறு காரணமாகச் சுபாஷ் தாஸ் என்ற நபர் தனது மனைவி கீதாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்து வயிறில் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பொதுமக்களையும் அவர் மிரட்டியுள்ளார். பின்னர், தன் வயிற்றைக் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். இக்கொடூரக் கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன.
