தென் சீனாவின் குவாங்சி பகுதியில் பெய்த அதி கனமழையால் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில், அணை விபத்தில் 26 பேர் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1,30,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு, 8,000 மீட்பு குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அங்கு மீண்டும் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.
