கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மார்ஃபிங் செய்து, போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் 23 வயதான தனுஷை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த இளைஞர் கைது
