Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்களை அடிமையாக்கும் செயலிகள்-ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

மக்களை அடிமையாக்கும் செயலிகள்-ஐரோப்பியம் குற்றச்சாட்டு

பிரஸ்ஸல்ஸ்: மெட்டா நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகள், பயனர்களைத் தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. மக்களின் மனநலனைப் பாதிக்கும் வகையிலான தொழில்நுட்ப உத்திகளை நீக்கி, அல்காரிதம் மற்றும் வடிவமைப்புகளில் உரிய மாற்றங்களைச் செய்யாவிட்டால் மெட்டா நிறுவனத்திற்குப் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளில் உள்ள சில குறிப்பிட்ட வடிவமைப்பு அம்சங்கள் பயனர்களைத் தொடர்ந்து மொபைல் திரையிலேயே முடங்கி கிடக்கச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்த வீடியோ தானாக ஓடும் ‘ஆட்டோ பிளே’ (Autoplay) அம்சம் மற்றும் முடிவே இல்லாமல் பக்கங்களை நகர்த்திக் கொண்டே இருக்கச் செய்யும் ‘இன்பினிட் ஸ்க்ரோலிங்’ (Infinite Scrolling) போன்ற அம்சங்கள் பயனர்களை அடிமையாக்கும் நோக்கில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் மக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம் மற்றும் மனநலனைப் பெருமளவில் பாதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த ஆபத்தான அம்சங்களை முழுமையாக நீக்கிவிட்டு, தங்களின் அல்காரிதம் மற்றும் டிசைன்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய வருவாயில் பெரும் பகுதியை அபராதமாக விதிக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!