தவெகவுக்கு தாவியவர்களை மீன்கடை பூனைகள் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார். செயற்கையாக காலி இடங்கள் உருவாக்கப்பட்டதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இசக்கி சுப்பையா பதட்டத்துடன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் முன்பே அழைத்து விசாரித்திருக்க வேண்டும். சபாநாயகர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டார். சபாநாயகர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
தவெகவுக்கு தாவியவர்கள் மீன்கடை பூனைகள. விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார் முதல்வர் விஜய். தவெகவுக்கு ஓட்டுபோடக்கூடாது என்பதற்காகவே விசிக, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் வாக்களித்தனர். இரவல் வாங்கி ஆட்சி நடத்தும் விஜய் ஒரு வாடகை சக்தி என்றும் கூறினார்.
