சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் பல்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பக்கவாட்டு சாலையிலிருந்து கார் ஒன்று வந்தது. இதை கவனித்த பேருந்து ஓட்டுனர் ஹாரன் ஒலி எலிப்பியும், கார் சாலையை கடக்க முயன்றது. இதனால் அந்த கார் மீது பேருந்து பயங்கரமாக மோதியதில் கார் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
