Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,265 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 39,690 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உள்ள உண்டியல்களில் ரூ.4.26 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. பக்தர்களுக்கு 4.09 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.98 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சனிக்கிழமையான இன்று பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பச்சிகல்வா கெங்கம்மாக கோயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!