ஜெயங்கொண்டம் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஐந்து டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெயங்கொண்டம் – தொடர் போராட்டத்தினால் சாதித்துக் காட்டிய கிராம பொதுமக்கள்
உடையார்பாளையம் தாலுகாவில் கிராம மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து ஐந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளால் பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் டாஸ்மாக் கடைகளால் வருங்கால சமுதாயம் சீரழிந்து வருவதாகவும் குற்றம் சாட்டும் அந்தந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வாரியங்காவல், கோடாலி, தா. பழூர், கல்லாத்தூர், வல்லம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் காரணமாக அந்தந்த டாஸ்மாக் கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் தங்கள் குடும்பம் நிம்மதியாக இருப்பதாகவும் தங்கள் கிராமம் அமைதியாக இருப்பதாகவும் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு எதிரான அரசின் திட்டத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்தால் தங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என இந்த ஐந்து கிராம மக்களும் நிரூபித்து உள்ளனர்
ஐந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது ஒரு வகையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மூடப்பட்ட டாஸ்மாக் பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு படையெடுப்பதையும் மறுப்பதற்கு இல்லை.
