Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா…

திருச்சி மாவட்டம், அல்லிமால் தெருவில் உள்ள திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர் தின விழா அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் கிராபிக்ஸ் நிறுவனர் வீரநாதன் கணினியும் மகளிரும் என்ற தலைப்பில் அச்சக துறை சார்ந்த மகளிர்க்கு சிறப்புரை வழங்கினார்.

திருச்சி மாவட்ட மாதர் சங்க செயலாளர் சரஸ்வதி மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தின் மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அச்சகத்துறையில் சாதித்து வரும் மகளிர்க்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக சங்கத்தின் செயலாளர் மோகன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!