Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

பெரம்பலூர் நகராட்சியில் பாதசாரிகளை, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பயிற்சி பெற்ற வடமாநில வாலிபர்களைக் கொண்டு வலைவிசிப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதோடு, 484 நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனுசனை கடித்த கதையாக கிராமப்புறங்களில் கூறப்பட்டு வரும் முதுமொழிக்கு முக்கிய உதாரணமாக மாறிவிட்ட தெரு நாய்கள் பல்வேறு கிராமங்களில் பட்டிகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்த மாடுகளை ஆடுகளை கடித்து, கடைசியில் தெருக்களில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை, பொது மக்களை கடிப்பதோடு இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று கடிப்பதோடு மட்டுமன்றி, சறுக்கி விழச் செய்து விபத்துகளுக்கும் காரணமாக தெரு நாய்கள் திகழ்ந்து வருகின்றன.

error: Content is protected !!