Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் தீவிரம்

கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் கண்காணிப்பு

சென்னை–மங்களூரு விரைவு ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை: கரூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் ‘சன்னி’ உதவியுடன் தீவிர கண்காணிப்பு.

சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கரூர் ரயில்

நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர்

ஹரிஹரன் மற்றும் 12 காவலர்கள் கொண்ட குழுவினர் ரயில் வந்தடைந்ததும் பயணிகளின் உடைமைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்களை மோப்பநாய் சன்னி உதவியுடன்

சோதனை செய்தனர்.

போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்கவும், ரயில் மார்க்கம் வழியாக நடைபெறும் சட்டவிரோத செயல்களை கண்காணிக்கவும் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக

அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையால் கரூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!