கர்நாடகாவில் நிலத்தை கையகப்படுத்த வந்த அரசு அதிகாரிகளை மக்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில அரசு ‘AI City’ என நவீன நகரத்தை உருவாக்க பிடாடி டவுன்சிப் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்க இந்த திட்டம் கொண்டுவருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான இடத்தை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தபோது, அங்கு திரண்ட விவசாயிகள் அதிகாரிகளை அடித்து விரட்டியுள்ளனர்.
