Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

திருப்பத்தூர் அருகே வைக்கோல் புல்லை பசுமாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புகாட்டி இருவரை சரமாரியாக தாக்கிய கணவன்,மனைவி மூதாட்டி இருவரும் மருத்துவமனையில் அனுமதி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோடியூர் அருகே அங்கநாதவலசை பகுதியை சேர்ந்த அருள் சோனியா தம்பதியினர் இவர்கள் பசுமாடு வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோனியாவின் பக்கத்து வீட்டுக்கு காரரான ஜெயமணி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் புல்லை ஜெயமணி வீட்டில் இல்லாதபோது சோனியாவின் பசுமாடு மேய்ந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சோனியாவிற்கு ஜெயமணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சோனியா அதே பகுதியை சேர்ந்த அக்கா தங்கைகளான லலிதா(65), புஷ்பா(60) ஆகிய இருவரும் சோனியாவின் பசுமாடு ஜெயமணியின் வைக்கோல் புல்லை மேய்ந்ததாக ஜெயமணியுடன் கூறியதாக கூறி லலிதா, புஷ்பா ஆகிய மூதாட்டி இருவரையும் சோனியா மற்றும் சோனியாவின் கணவர் அருள் ஆகிய இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த லலிதா, புஷ்பா ஆகிய மூதாட்டி இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!