Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் -அபாயம்

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்-அபாயம்

டெல்டா மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, குடிநீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் அபாயம்..

ஆடி 18-யை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து 10-நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..

தற்போது தமிழகமெங்கும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக சூழ்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மின்மோட்டார் ஆழ்குழாய் கிணறு மூலம் அதிக அளவில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடாத காரணத்தாலும் அதிக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் நிலததடி நீர்மட்டம் பெருமளவில் குறைந்துள்ளது..

இதன் காரணமாக மின் மோட்டார் மூலம் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. மேலும் மின்சாரம் அழுத்தமும் குறைவாக உள்ளதால் போதிய அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல்
பல இடங்களில் நடவு நட்ட பயிர்கள் காய்ந்து வருகின்றன.

இதேபோல் சென்ற வருடங்களில் மேட்டூர் அணை திறப்பது தாமதப்பட்ட பொழுது ஆடி-18 ஐ முன்னிட்டு 10-நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆகையால் கால்நடைகள் பாதுகாப்பு, குடிநீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைவு காரணங்களால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மேட்டூர் அணையில் இருந்து 10-நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாகவும் விவசாயிகள் சார்பாகவும்
கேட்டுக்கொள்கிறேன்

error: Content is protected !!