சென்னை: தாம்பரம் அருகே சேலையூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜி (44) என்பவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி பாலாஜியை போலீசார் சிறையில் அடைத்தனர். நெஞ்சுவலி காரணமாக சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு பாலாஜியை கொண்டு சென்றனர். பாலாஜி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாலாஜி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
