தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சுற்றறிக்கைக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். விருப்ப மொழி எனக்கூறி தேர்ச்சியை கட்டாயமாக்குவது மறைமுக மொழித் திணிப்பு என்றும், இருமொழிக் கொள்கையில் சமரசம் செய்யாமல் இச்சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
