Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

29ம் தேதி திருவண்ணாமலை-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஜூலை 29 தேதி விழுப்புரத்தில் காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும் என்றும், அதைப்போன்று மறுமார்க்கத்தில் 12.40 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதையடுத்து இந்த ரயில்கள் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்டு, சிறப்பான சேவை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!