இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. பணிபுரியும் இடத்தைப் பொறுத்து மாத ஊக்கத்தொகையாக ரூ.14,000 முதல் ரூ.15,500 வரை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20-07-2026.
