பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், அப்பாவி பொதுமக்களை கொன்ற 24 ஆபத்தான பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதோடு, அவர்களிடமிருந்த நவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
