திருப்பனந்தாள் அருகே சிற்றிடையாநல்லூர் கிட்டங்கி தெருவில் இட பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த குபேந்திரன் அரிவாளால் வெட்டியதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஞான சௌந்தரி என்பவருக்கு பலத்த காயம். தடுக்க வந்த கல்யாணி, கவியரசன், சுகுமார், வீரமணி ஆகிய நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு . அரிவாளால் வெட்டிய குபேந்திரன் கைது. வெட்டுபட்ட 5 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதி. இச்சம்பவம் தொடர்பாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை .
திருப்பனந்தாள் அருகே சிற்றிடையாநல்லூர் கிட்டங்கி தெருவை சேர்ந்த குபேந்திரனுக்கும்,
இவரது பக்கத்து வீட்டுக்காரரான ஞானசவுந்தரிக்கும் இட பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது .
இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த குபேந்திரன் அரிவாளால் தனது வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் பாரதி என்பவருக்கு சொந்தமான காரின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ஞானசௌந்தரியை குபேந்திரன் கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டி உள்ளார் .
இதனைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த கல்யாணி, கவியரசன், சுகுமார், வீரமணி, ஆகியோர் அறிவாளால் வெட்டுவதை தடுக்க முயன்றனர்.
இதில் இந்த நால்வருக்கும் அறிவாளால் வெட்டுக்காயம் ஏற்பட்டது .
இச்சம்பவம் தொடர்பாக திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு தகவல் தரவே விரைந்து வந்த திருப்பனந்தாள் காவல் நிலையத்தார் அறிவாளால் வெட்டிய குபேந்திரனை கைது செய்தனர் .
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஞான சௌந்தரி, கல்யாணி /கவியரசன் ,சுகுமார், வீரமணி ஆகிய ஐந்து நபர்களும் உடனடியாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் ஞான சவுந்தரிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .
எஞ்சிய கல்யாணி, கவியரசன், சுகுமார் வீரமணி ,ஆகிய நான்கு நபர்கள் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இட பிரச்சனை காரணமாக அறிவாளால் வெட்டிய குபேந்திரனை கைது செய்த காவல் நிலையத்தார் துறையினர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குபேந்திரன் மீது திருப்பனந்தாள், பந்தநல்லூர், குத்தாலம் ஆகிய மூன்று காவல் நிலையங்களிலும் திருட்டு, அடிதடி வழக்குகள் பல நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
திருவிடைமருதூர் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் காவல்துறையினர் வெட்டுப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது .
