Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், நீதிகோரி போராடிய இளைஞர்கள் மீது பாஜக அரசு தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம் என்று அவர் தனது கண்டன அறிக்கையில் சாடியுள்ளார்.

தேசிய அளவில் மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் மாணவர்களுடன் சேர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்களும் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வில் முறைகேடு செய்த முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்டுவிட்டு, தங்களது எதிர்கால உரிமைக்காகப் போராடும் மாணவர்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைப்பது மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு என்று கடுமையாகக் சாடியுள்ளார்.

error: Content is protected !!