Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

18 வயதேயான இளம் நடிகை கெய்லி ஹோட்டில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், 2021ம் ஆண்டு வெளியான காட்சில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தில் ஜியா என்ற சிறுமியின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து, 2024ல் வெளியான இந்தப் படத்தின் 2வது பாகத்திலும் இதே கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ரெபெக்கா ஹால், டான் ஸ்டீவன்ஸ் மற்றும் பிற ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் கெய்லி காட்சில்லா படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மேரிலாந்தின் பிரடெரிக் பகுதியில் நேற்று (ஜூலை 21) நடந்த சாலை விபத்தில் நடிகை கெய்லி ஹோட்டில் உயிரிழந்தார். அதிவேகமாக காரை இயக்கியதே இந்த விபத்துக்கான காரணம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். கெய்லி உயிரிழந்தத் தகவலை அவரது தந்தை ஜோசுவா ஹோட்டில், அமெரிக்க சைகை பயன்படுத்தி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் உறுதி செய்துள்ளார். கெய்லியின் உயிரிழப்பு ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரமாண்ட படங்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான வார்னர் பிராஸ், தனது எக்ஸ் தளத்தில் கெய்லியின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!