சுங்கசாவடிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் டிஜிட்டல் முறையில் லோக்கல் பாஸ் வாங்கும் முறையை NHAI அறிமுகம் செய்துள்ளது. அதனால் மக்கள் ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிக்கு சென்று பாஸ் வாங்குவதற்கு பதில், ராஜ்மார்க் யாத்ரா செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். டெல்லியில் அமலுக்கு வந்துள்ள இது விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. டோல்கேட்டில் இருந்து 20KM சுற்றளவில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
