நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்த ஒன்றிய பாஜக அரசு கண்டித்து மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 100 க்கு மேற்பட்டோர் சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சி மத்திய சென்னை கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே செல்வம் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் அருள் பெத்தையா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்புச் செயலாளர் ராம் மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி மாவட்ட உறுப்பினர் சுகன்யா செல்வம், மற்றும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றார்கள்…
அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் அருள் பெத்தையா
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் பாஜக அரசு தொடர்ந்து முறைகேடுகளை செய்து வருகிறது, வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார்
இந்த வினாத்தாள் கசிவிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்த வருகிறார்
நீட் மற்றும் பல்வேறு தேர்வுகளின் குளறுபடிகளுக்கு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும், அதனை அவர் மறுக்கிறார்
காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு துறைகளில் முறைகேடு நடந்தால் அந்த துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள்.ஜனநாயக கடமைகளை காங்கிரஸ் கட்சியில் நாங்கள் செயல்படுத்தினோம்
நீட் தேர்வு குளறுபடி எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தும், மத்திய அமைச்சர் ராஜினாமா செய்யாதது கண்டிக்கத்தக்கது, இது பாசிசத்தின் வெளிப்பாடு
மத்திய அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், இந்த நீட் தேர்வு விவகாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும், அதற்கு தான் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறோம்
மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.மாணவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் தான் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது, மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி காவல் துறையினர் தாக்கியுள்ளார்.
மாணவர்களை தாக்கி எப்படி கைது செய்தார்களோ அதே நிலை தான் ராகுல் காந்திக்கும் ஏற்பட்டுள்ளது
மத்திய அரசை யார் எதிர்த்து பேசினாலும் வன்முறையை கையாண்டு அடைக்கி விடலாம் என இந்த பாஜக அரசு முயல்கிறது. நேற்று தொடங்கியிருக்கிற இந்த யுத்தம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்
