Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

திருச்சி கே சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52) பெயிண்டர்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ளனர்.
மதுவுக்கு அடிமையானவர்.
இந்த நிலையில் சண்முகம் மது போதையில் இன்று காலை திருச்சி கே சாத்தனூரில் உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பெயிண்டர் ஆன சண்முகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் குடும்பத்தினர் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த குளத்தில் பிணமாக மிதந்து இறந்துள்ளார்.இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் குளத்தில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!