Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

என் சீட்லையே உட்காருவரா?- குடும்பத்துடன் இறக்கிவிடப்பட்ட சோகம்

என் சீட்லையே உட்காருவரா?” எனக் குதித்த கண்டக்டர்: குடும்பத்துடன் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சோகம் – கோவை கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து ஸ்தம்பித்தது !!!

கோவை, காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றில், இருக்கை கிடைக்காததால் நடத்துனர் இருக்கையில் அமர்ந்த பயணியைக் கண்டித்து நடு ரோட்டில் கீழே இறக்கி விட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரங்கேறி பரபரப்பு சம்பவம்…

காந்திபுரத்தில் இருந்து 14A அரசுப் பேருந்தில் தனது குடும்பத்தினருடன் ஆலாந்துறை செல்வதற்காக ஏறிய பயணி ஒருவர், பேருந்து முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்ததால் உட்காரச் சீட்டு இல்லாமல் பரிதவித்து உள்ளார்.

நிலைமையைப் புரிந்து கொண்ட அவர், வேறு வழியின்றி காலியாக இருந்த நடத்துனர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து உள்ளார்.

​சிறிது நேரத்திற்குப் பின் இருக்கைக்கு வந்த நடத்துனர், தன் இருக்கையில் ஒரு பயணி அமர்ந்து குருப்பதைக் கண்டு கடும் ஆத்திரம் அடைந்து , “என் சீட்லையே வந்து உட்காருவரா ? எந்திரிச்சு நில்லு!” என ஒருமையில் பேசி எழுப்பிவிட்டு உள்ளார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துச் சண்டை முற்றிய நிலையில், கோபத்தின். உச்சத்திற்குச் சென்ற நடத்துனர், பேருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது குடும்பத்துடன் வந்த அந்தப் பயணியை நடுரோட்டில் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டு உள்ளார்.

இதனால் அதிர்ந்து போன அந்த நபர் நடுவழியில் குடும்பத்துடன் நின்று கொள்ள, அப்பகுதியில் திடீரெனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தகவலறிந்து வந்த ரோந்து காவல் துறையினர், நடத்துனரையும் அந்தப் பயணியையும் சமாதானப் பேசி மீண்டும் அதே பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அரசுப் பேருந்துகளில் தொடரும் இது போன்ற பயணிகளுடனான மோதல்கள் பொதுமக்களை சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிக்கச் செய்து உள்ளது.

இதுபோன்று பயணிகளிடம் ஒருமையில் பேசி தகராறு ஈடுபடும் அரசு பேருந்து ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பயணிகளின், பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

error: Content is protected !!